தேசிய செய்திகள்

சர்வதேச விமான சேவைக்கு அக்டோபர் 31-ந் தேதி வரை தடை நீட்டிப்பு

சர்வதேச விமான சேவைக்கு அக்டோபர் 31-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி, சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தம் அடிப்படையில், 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை நாளை (வியாழக்கிழமை) முடிவடைய இருந்தநிலையில், அக்டோபர் 31-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவித்தது. இருப்பினும், தேவை அடிப்படையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படலாம் என்றும், சரக்கு போக்குவரத்துக்கு இத்தடை பொருந்தாது என்றும் கூறியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்