லக்னோ,
உத்தரபிரதேசத்தில் லக்னோ ரெயில்வே கோட்டத்தில் உள்ள பைசாபாத் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் பெயர், அயோத்தி கன்டோன்மெண்ட் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை வடக்கு ரெயில்வே நேற்று அறிவித்தது.
இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது. உத்தரபிரதேச மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. பைசாபாத் மாவட்டத்தின் பெயர், அயோத்தி மாவட்டம் என்று ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.