தேசிய செய்திகள்

58-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் : இன்று அரசுடன் நடைபெறும் 11-வது சுற்று பேச்சுவார்த்தை பலன் தருமா...!

குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கியத் திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இன்று மீண்டும் 11 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளுடன் பேச்சு நடத்த உள்ள மத்திய அரசு சுமுகமாக முடித்து வைக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.

குடியரசு தின நாளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கியத் திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை