தேசிய செய்திகள்

இந்தியா-பிரான்ஸ் கடற்படைகள் இடையே ‘வருணா 2022’ முதற்கட்ட பயிற்சி இன்று நிறைவு

இந்தியா-பிரான்ஸ் ஆகிய இருநாட்டு கடற்படைகள் இடையே ‘வருணா 2022’ என்ற கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது.

தினத்தந்தி

கோவா,

இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுக்கு இடையே இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சிகள் கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கு வருணா என 2001-ம் ஆண்டு பெயரிடப்பட்டு, இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான இருதரப்பு உறவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா-பிரான்ஸ் கடற்படைகளுக்கு இடையிலான 20-வது இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சியான வருணா 2022 கோவா அருகே அரபிக்கடல் பகுதியில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது.

இந்த பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. அதன்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய முதற்கட்ட பயிற்சி, ஏப்ரல் 3 ஆம் தேதி(இன்று) நிறைவடைந்தது. இதனையடுத்து 2-ம் கட்ட பயிற்சிகள் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ளது.

இருநாட்டு கடற்படைகளின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடலோர ரோந்து விமானம், போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இந்த கூட்டுப் பயிற்சி இருநாடுகளின் சிறந்த உத்திகளை பரஸ்பரம் மற்றவர் அறிந்து கொள்ள ஒருவாய்ப்பாக அமைந்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்