கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

திருமணம் செய்வதாக கூறி பெண்களுடன் உல்லாசம்... நகைகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகைகளுடன் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

பீகாரை சேர்ந்தவர் சோனுகுமார் (வயது 29). இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் பீனியாவை சேர்ந்த குஸ்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே அண்மையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் குஸ்மாவுடன் சோனுகுமார் மாயமானார். இதுகுறித்து பீனியா போலீசில் குஸ்மா குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுகுறித்து பீனியா போலீசார் நடத்திய விசாரணையில் சோனுகுமார் பல பெண்களுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தது தெரிந்தது.

மேலும் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின்னர் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

குஸ்மாவுக்கு முன்னதாக ஏற்கனவே அவர் ஒரு பெண்ணிடம் இதேபோல் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்று தெரியவந்தது. இதுவரை வேறு பெண்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துள்ளனர். இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சோனுகுமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்