தேசிய செய்திகள்

ஒவ்வொரு அறிவிப்புக்கும் விமான பணிப்பெண்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்ல வேண்டும் - ஏர் இந்தியா உத்தரவு

ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியிடும் போதும் விமான பணிப்பெண்கள் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாபாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் இந்திய மக்கள் இடையே தேசப்பற்று உணர்வு முன்பை விட அதிகரித்துள்ளது. இதே உணர்வை விமான பயணிகளிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதன்படி விமான பணிப்பெண்கள் ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியிடும்போதும் ஜெய்ஹிந்த் என கூறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் ஜெய்ஹிந்த் கூறவேண்டும் என்று 2016-ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஏர் இந்தியா இயக்குநரான அமிதாப் சிங் வெளியிட்ட அறிக்கையில் விமானத்தில் செய்யப்படும் அனைத்தும் அறிவிப்புகள் முடிவிலும் ஜெய்ஹிந்த் எனக் கூற வேண்டும் என்ற விதி உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை