தேசிய செய்திகள்

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் - பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை கார் சென்றுகொண்டிருந்தது.

அந்த காரில் 4 பேர் பயணித்தனர். இதில் ஒருவர் போட்டித்தேர்வில் பங்கேற்க சென்றுள்ளார்.

இந்நிலையில், நெடுஞ்சாலையில் மகராஜ்புரா பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. பனிமூட்டமான காலை வேலையில் நடந்த இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி