தேசிய செய்திகள்

டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் அரசு பேருந்துகளில் அக்.29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கெஜ்ரிவால் கூறும் போது, ரக்ஷா பந்தன் தினமான இன்று, நமது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை அளிக்கிறேன்.

டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாதாந்திர கட்டண செலுத்து முறையில் இயங்கும் கிளஸ்டர் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு