தேசிய செய்திகள்

மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை மேலும் நீட்டிப்பு.!

கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மணிப்பூரில் ஜூலை 5 ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இணைய சேவை தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.  

மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதை அடுத்து, கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT