தேசிய செய்திகள்

ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்துப் பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேறுக்கொண்டார்.

இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள குஜராத் முதல் மந்திரி இன்று காலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சந்தித்தார். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்களையும் பூபேந்திர படேல் சந்திக்கவுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்