தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

தினத்தந்தி

சிம்லா,

இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு, நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாள். அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக களம் காணுகிறது.

இந்த நிலையில்,4 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

அதன்படி, கின்னவுர்-எஸ்டி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ஜகத் சிங் நேகியை மீண்டும் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெய்சிங்பூர்-எஸ்சி தொகுதியில் இருந்து யாத்விந்தர் கோமா நியமிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர் நிகம் பண்டாரி, கின்னாரிலிருந்து கட்சியின் வேட்பாளராக விரும்பினார். மணாலி தொகுதியில் இருந்து புவனேஷ்வர் கவுர், போண்டா சாஹிப் தொகுதியில் இருந்து கிர்ணேஷ் ஜங் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு