கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஜே.இ.இ. தேர்வு இரு கட்டங்களாக குறைப்புக்கு எதிரான மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜே.இ.இ. தேர்வு இரு கட்டங்களாக குறைப்புக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நான்கு கட்டங்களாக நடக்கும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, இரு கட்டங்களாக குறைக்கப்பட்டதற்கு எதிராக அரியானாவை சேர்ந்த கிருஷ்ணா ராணா உள்ளிட்ட 13 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் சுமந்த் நூக்லா ஆஜராகி, 4 கட்டங்களாக நடக்கும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு இரு கட்டங்களாக குறைக்கப்பட்டதால் மிகவும் கடினமாகியுள்ளது என வாதிட்டார்.

அவரது வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதி, உள்ளடக்கம் என எதுவும் மாறாதபோது, எப்படி ஒவ்வொரு கொள்கையிலும் கோர்ட்டு தலையிட்டுக்கொண்டே இருக்க முடியும் என கேட்டனர். இந்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம் என தெரிவித்து, ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்