தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள்; ஹர்ஷ்வர்தன் தகவல்

இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். கொல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஹர்ஷ்வர்தன் கூறுகையில், அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகளை மட்டுமே இந்தியா சார்ந்து இருக்கப்போவது இல்லை.

நமது நாட்டிலேயே மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வகை செய்யும் அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. திறந்த சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வரும் போது அதன் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. 50-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்