தேசிய செய்திகள்

3 நாட்கள் சுற்று பயணம் ஆக நேபாளம் வந்தடைந்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்

நேபாள நாட்டின் ராணுவ தினத்தினை முன்னிட்டு இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்று 3 நாள் சுற்று பயணம் ஆக காத்மண்டு நகரை வந்தடைந்துள்ளார்.

தினத்தந்தி

காத்மண்டு,

நேபாள நாட்டில் ராணுவ தினம் கொண்டாடப்பட உள்ளது. நேபாள நாட்டின் 250வது ஆண்டு ஒருங்கிணைப்பு உருவாக்க ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி ராஜேந்திர சேத்ரி, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு நேபாள நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு சென்றுள்ள ராவத் அங்கு நடைபெறும் ராணுவ தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்