தேசிய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹவில்தார் பதம் பஹதுர் ஸ்ரேஷ்தா மற்றும் கமீல் குமார் ஸ்ரேஷ்தா ஆகிய இருவரும், குடி மக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினதாகவும், பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்து இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், நமது வீரர்களின் தியாகத்தை போற்றுவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்