தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.82 ஆனது

தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ரூ.72.82 ஆனது.

தினத்தந்தி

மும்பை,

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.

இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.82 ஆக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பால் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.73-ஐ நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.13 ஆகவும், டீசல் விலை ரூ.78.36 ஆகவும் விற்பனை ஆகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு