தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: குழந்தை பலி; 5 சுற்றுலாவாசிகள் காயம்

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குழந்தை பலியானதுடன் சுற்றுலாவாசிகள் 5 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் காங்ரா மாவட்டத்திற்கு சுற்றுலாவாசிகள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பாக்சு நாக் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தரம்சாலா பகுதியில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாக்சு நாக் நீர்வீழ்ச்சி நோக்கி நடந்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற மலை பகுதியின் வழியில், பெருங்கற்கள் திடீரென சரிந்து விழுந்துள்ளன.

இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் உனா மாவட்டத்தின் ஹரோலி பகுதியை சேர்ந்த லவ் தீப் என்ற 8 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. இது தவிர்த்து ஜக்பால் (வயது 30), அச்சார் சிங் (வயது 30), சுனிதா (வயது 23), பிரீத் (வயது 8) மற்றும் அர்னாப் (வயது 2) ஆகிய ஹரோலி பகுதியை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தரம்சாலா நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதன்பின் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்