தேசிய செய்திகள்

5ஜி தொழில்நுட்பத்திற்கும், கொரோனா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - தொலை தொடர்புத் துறை

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தால் கொரோனா பரவவில்லை என தொலை தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவால் தினசரி பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் 5ஜி தொழில்நுட்பத்தால்தான் இந்தியாவில் கொரோனா பரவுகிறது என வாட்ஸப் உள்ளிட்ட செயலிகளில் போலி செய்தி வேகமாய் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தால் கொரோனா பரவவில்லை என தொலை தொடர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை கூறுகையில், '5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பம் சோதனை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. 5ஜி இணைப்பு சோதனை இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை' என கூறியுள்ளது.

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு