தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்முவின் கிஷ்துவார் மாவட்டம் சாட்ரோ வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படைனர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

என்கவுன்ட்டர் நடைபெற்று வரும் பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

நாளை மத்திய பட்ஜெட் - தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது

சுனேத்ரா, துணை முதல்-மந்திரி ஆகிறார் இன்று பதவி ஏற்க வாய்ப்பு

அஜித்பவாரின் அஸ்தி கரைப்பு