தேசிய செய்திகள்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆள் கிடையாது; குமாரசாமி பேட்டி

தேர்தலில் போட்டியிட கூட தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆள் கிடையாது என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மங்களூரு;

குமாரசாமி ஆறுதல்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார், கடந்த மாதம் (ஜூலை) 26-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரவீன் நெட்டாரின் வீட்டுக்கு நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.இதையடுத்து அவர் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குமாரசாமி கூறியதாவது:-

ஆள் கிடையாது

பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை வருகிற 5-ந்தேதிக்குள் கைது செய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்யவில்லை என்றால் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும். எக்காரணம் கொண்டும் போலீசார் தாமதம் செய்யக்கூடாது. நான் அரசியலுக்காக இங்கு வரவில்லை.

சொல்லப்போனால் தேர்தலில் போட்டியிட கூட தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஆள் கிடையாது.வருகிற 5-ந்தேதிக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் கண்டிப்பாக போராட்டம் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்