தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். #Jharkhand

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலம் தும்பாவில் இன்று காலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடத்த இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

அதிகாலையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். காரில் பயணம் செய்தவர்கள் தும்பாவை அடுத்த ரசிக்பூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் டீகோஹருக்கு போட்டித்தேர்வு எழுவதற்காக சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை