தேசிய செய்திகள்

ரிலையன்ஸ் ஜியோ பிராட் பேண்ட் ரூ.500க்கு 100ஜிபி டேட்டா புதிய சலுகை

ரிலையன்ஸ் ஜியோ பிராட் பேண்ட் ரூ.500க்கு 100ஜிபி டேட்டா புதிய சலுகை தீபாவளியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4 ஜிபி சேவையை அறிமுகப்படுத்தி பெரும்பான்மை வாடிக்கையாளர்களை தன் கை வசம் வைத்துக்கொண்டது. ஜியோ 4 ஜிபி அறிமுகப்படுத்தப்படும் போது இலவச சேவையை அறிமுகம் செய்து பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் சர்வ சாதாரணமாக ஜியோவுக்கு மாறினார்கள்.

அதேபோல தற்போது வீடுகளுக்கான பிராட் பேண்ட் சேவையிலும் ஜியோ கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. வருகின்ற தீபாவளி பண்டிகையில் வாடிக்கையாளர்களுக்கு பிராட் பேண்ட் சேவையை வழங்க தீர்மானித்துள்ளது.

முதலில் 100 முக்கிய நகரங்களில் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் தற்போது 100ஜிபி டேட்டா ரூ.500க்கு அதிகபட்ச வேகம் 100 எம்.பி.பி.எஸ் என்ற அளவில் கிடைக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பிராட் பேண்ட் இணைப்புத்திட்டத்தில் 20மில்லியனுக்கும் குறைவானவர்களே உள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பிஎஸ்என்எல் இணைப்பில் உள்ளனர். ஏர்டெல் நிறவனத்திற்கு வாடிக்கையாளர் மூலமாக ரூ.1064 கிடைக்கிறது.ஆனால் அதே சமயத்தில் மொபைல் டேட்டா மூலமாக வெறும் ரூ.162 மட்டுமே கிடைக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் தனது பிராட் பேண்ட் கட்டணங்களை மாற்றி அமைத்தது. அதன்படி 60 ஜிபி டேட்டா ரூ.1099க்கும், 125 ஜிபி டேட்டா ரூ1299க்கும் வழங்குகிறது.

தற்போது ரிலையன்ஸ் ஜியோ வருகை தர உள்ளதால் மொபைல் டேட்டாக்களில் ஏற்பட்ட கடும் சரிவைப்போல பிராட் பேண்ட் துறையிலும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று மற்ற நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை