தேசிய செய்திகள்

நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பையில் வாழ உரிமை இல்லை - மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்

நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் வாழ உரிமை இல்லை என மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.

தினத்தந்தி

மும்பை:

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஏற்கனவே கங்கனா ரனாவத்திற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கண்டனம் தெரிவித்து உள்ளார். தற்போது போது மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நடிகையின் அவமானகரமான அறிக்கைகளுக்கு பின்னர் அவருக்கு "மும்பையில் வாழ உரிமை இல்லை" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறும் போது

மும்பை காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுடன் (பிரிட்டனின்) ஒப்பிடப்படுகிறது. சிலர் மும்பை போலீஸை குறிவைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகும் மும்பை காவல்துறையை ஒப்பிட்டுப் பார்த்தால் ... நடிகைக்கு மராட்டியத்திலோ மும்பையிலோ வாழ உரிமை இல்லை என கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்