தேசிய செய்திகள்

கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

மாநிலங்களவை உறுப்பினரும், கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி.யுமான அசோக் காஸ்தி கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவ பரிசோதனை செய்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அசோக் காஸ்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் இந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றிருந்தார். உயிரிழந்த அசோக் காஸ்தி எம்.பி.க்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்