கரூர்,
கரூரில் ஜோதிமணி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எம்.பி. என்ற முறையில் மக்கள் பிரச்சினை பற்றி பேச ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது செல்போன் எண்ணை கரூர் ஆட்சியர் பிளாக் செய்துள்ளார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குடிநீர் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தனக்கும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கும் அழைப்பு விடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.