தேசிய செய்திகள்

கேரள திரைப்பட தயாரிப்பாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

மார்ட்டின் செபாஸ்டியனை பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான மார்ட்டின் செபாஸ்டியன். இவர் மீது திருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மார்ட்டின் செபாஸ்டியனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT