திருவனந்தபுரம்:
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியததால், பதவியில் தொடர தகுதியில்லை என லோக் ஆயுக்தா கூறியதை தொடர்ந்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள உயர்கல்வித்துறை மந்த்கிரியாக இருந்தவர் கே.டி ஜலீல். அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பதவியேற்பு விதிகளை மீறியதுடன், அரசு பதவி நியமனங்களில் வாரிசுகளுக்கு சலுகை அளித்ததாக புகார் கூறப்பட்டது. இதனை விசாரித்த லோக் ஆயுக்தா, இந்த புகாரில் மந்திரி குற்றவாளி தான் எனவும், அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என தெரிவித்தது. இதை எதிர்த்து ஜலீல் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், லோக் ஆயுக்தா முடிவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் கே.டி ஜலீல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதனை முதல்வர் கவர்னருக்கு அனுப்பி வைத்து உள்ளார்.