கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோட்டில் குட்டிகாட்டூர் பகுதி அருகே பைக்கில் வந்த சிலர் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் 2 பேர் மீது வாளால் வெட்டி இன்று காலை தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பிரணவ் மற்றும் சுதீஷ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.