லக்னோ,
லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரிஅஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய மந்திரி மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ஆசிஷ் மிஸ்ரா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசிஷ் மிஸ்ராவின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.