தேசிய செய்திகள்

ரூ.2496 கோடி டாலர் விசா கட்டணம் : சட்டவிரோதமாக அமெரிக்கா வசூலித்தது -தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு

சட்டவிரோதமாக அமெரிக்கா ரூ.2496 கோடி டாலர் விசா கட்டணமாக வசூலித்தது என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

தினத்தந்தி

பெங்களூரு:

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச் -1 பி விசாக்களின் விண்ணப்பத்தை மாற்றுவதற்காக மொத்தம் 350 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2496 கோடி) சட்டவிரோதமாக வசூலித்ததாக குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி.சர்வ் வி அலையன்ஸ், ஐடெக் யு.எஸ், ஸ்மார்ட் ஒர்க்ஸ் மற்றும் சாக்சன் குளோபல் ஆகிய நிறுவனங்கள், யு.எஸ்.சி.ஐ.எஸ் தொடர்ந்து இந்த கட்டணத்தை வசூலிப்பதை நீதிமன்றம் நிறுத்த வேண்டும் என்றும் கடந்த ஆறு ஆண்டுகளாக வசூலித்த கட்டணங்கள் அனைத்தையும் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஐ.டி.சர்வ் அலையன்ஸ் என்பது அமெரிக்காவில் ஐ.டி சேவைகள், பணியாளர்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகளின் மிகப்பெரிய சங்கமாகும், இதில் 1,250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. மற்ற மூன்று இணைவாதிகளும் ஐ. டி சர்வ் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

எச் -1 பி விசாவுக்கு டாலர் 2,000 செலவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, எச் -1 பி மற்றும் எல் -1 ஏ மற்றும் எல் -1 பி மனுக்களுக்கு கூடுதலாக, 4,000 டாலர் விதிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு