தேசிய செய்திகள்

தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் 7 உட்பிரிவுகளை சேர்ப்பது பற்றி டெல்லியில் விசாரணை

தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் 7 உட்பிரிவுகளை சேர்ப்பது பற்றி டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் பரவலாக வசிக்கும் குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன், வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவு இனத்தவர்களையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்று, தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை நிறுவன தலைவர் எம்.தங்கராஜ் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பான விசாரணை, டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆணைய இணைச்செயலாளர் சுமிதா சவுத்ரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

விசாரணையைத் தொடர்ந்து தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 7 உட்பிரிவுகளில் வாதிரியான் பிரிவு சேர்க்கப்படவில்லை. எனவே, அதையும் சேர்க்க வேண்டும் என்று ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

அதைப்போல தமிழக அரசின் குழுவில் மானுடவியல் ஆய்வுக்குழு பிரதிநிதி ஒருவரையும் சேர்க்க வலியுறுத்தினோம். இது தொடர்பாக 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது என்றார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை