தேசிய செய்திகள்

துணை சபாநாயகர் ரமாதேவி குறித்து அசாம் கான் ஆபாச பேச்சு, அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு -சபாநாயகர் அறிவிப்பு

துணை சபாநாயகர் ரமா தேவியை சமாஜ்வாதி கட்சி எம்.பி அசாம் கான் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, முடிவு எடுக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை மசேதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. சபாநாயகர் இருக்கையில் ரமா தேவி அமர்ந்து சபையை நடத்திக் கெண்டிருந்தபேது, முத்தலாக் மசேதாவுக்கு எதிராக ஆசம் கான் பேசினார்.

அப்பேது, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து சக எம்.பிக்களின் குறுக்கீடு அதிகமாக இருப்பதாக அசாம் கான், ரமா தேவியிடம் புகார் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த ரமா தேவி, குறுக்கீடுகளை கவனத்தில் கெள்ளாமல் தம்மைப் பார்த்து பேசுமாறு கேரினார். அப்பேது, ரமா தேவிக்கு எதிராக அசாம் கான் ஆபாசமாகப் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரமா தேவி தனது வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என அசாம் கானை வலியுறுத்தினார்.

அசாம் கானின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். தனது பேச்சை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த அசாம் கான், தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், அவ்வாறு பேசியதாக நிரூபித்தால் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் இன்று எழுப்பினார். அப்பேது பேசிய அவர், அசாம் கானுக்கு எதிராக அனைத்து உறுப்பினர்களும் ஒரே குரலில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அசாம் கானுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கெண்டார்.

தனது பேச்சுக்கு அசாம் கான் மன்னிப்பு கேர வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரை சபாநாயகர் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பெண்கள் அவமதிக்கப்படுவதை தங்கள் கட்சி தெடர்ந்து எதிர்க்கும் என தெரிவித்தார்

அசாம் கானுக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சக்கரவர்த்தி உள்ளிட்டேர் பேசினர். ஆசம் கான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அசாம் கான் பேசிய பேச்சு தெடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என தெரிவித்தார். அசாம் கான் மீது எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி அதில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்