தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 71 ஆயிரத்து 552 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 286 பேர் குணமடைந்து உள்ளனா. இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 67 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை மராட்டியத்தில் 52 ஆயிரத்து 288 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 40 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,101 ஆக உயர்ந்துள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி