கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஹால்டியாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.