தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மங்களூருவில் நபர் படுகொலை எதிரொலி; 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

கர்நாடகாவில் கடை முன் நின்ற நபர் படுகொலை எதிரொலியாக மங்களூருவில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மங்களூரு,

கர்நாடகாவின் மங்களூரு நகரில் சூரத்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனது கடை முன் ஜலீல் என்பவர் நேற்றிரவு நின்று கொண்டு இருந்துள்ளார். அவரை அடையாளம் தெரியாத 2 பேர் திடீரென தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருவுக்கு உட்பட்ட சூரத்கல், பாஜ்பே, காவூர் மற்றும் பனம்பூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 27-ந்தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வேறு எந்தவித வன்முறையும் பரவி விடாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை நகர கமிஷனர் பிறப்பித்து உள்ளார். இதேபோன்று, வருகிற 27-ந்தேதி காலை 10 மணிவரை மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை