கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

83வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை

83வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில் 83வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில், நாளை காலை 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். மான் கி பாதி (#MannKiBaat) என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக சென்ற மாதம் நிகழ்த்திய உரையில், கொரோனா வைரஸ்க்கு (கோவிட் -19) எதிராக நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தை வெற்றிகரமாக செய்ததற்காகவும், ஒரு பில்லியன் தடுப்பூசி டோஸ்களை செலுத்தி புதிய மைல்கல்லை கடந்ததற்காகவும் இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை