தேசிய செய்திகள்

மராட்டியம்: மணல் கடத்தல் குழுக்கள் மோதலில் 2 பேர் சுட்டு கொலை

மராட்டியத்தில் மணல் கடத்தல் குழுக்களுக்கு இடையேயான துப்பாக்கி சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் உருளி கஞ்சன் பகுதியில் மணல் கடத்தல் தொழில் நடந்து வருகிறது. இதில் இரு குழுக்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று (வெள்ளி கிழமை) மதியம் 2.30 மணியளவில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஒருவரையொருவர் துப்பாக்கிகளால் சுட்டு கொண்டனர்.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழப்பதற்கு முன் எதிரி குழுவை சேர்ந்த ஒருவரை சுட்டு கொன்றுள்ளார். இதுதவிர, 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மோதலில் உயிரிழந்த இருவரின் பெயர்களும் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், எதிரிகளும் ஆவர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்