தேசிய செய்திகள்

மராட்டியம்: வரும் 22ந்தேதி முதல் கேளிக்கை பூங்காக்களை திறக்க அரசு முடிவு

மராட்டியத்தில் வருகிற 22ந்தேதி முதல் கேளிக்கை பூங்காக்கள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

புனே,

நாட்டில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநில வரிசையில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது. பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உயரதிகாரிகளுடன் இன்று கூட்டம் ஒன்றை நடத்தி, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இதுபற்றி, முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உணவு விடுதிகள் மற்றும் கடைகளின் நேரம் நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 22ந்தேதி முதல் கேளிக்கை பூங்காக்கள் திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. எனினும், நீர்சறுக்கு இன்றி அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?