தேசிய செய்திகள்

மீரா குமாரை பலி ஆடு ஆக்கிவிட்டனர் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாரை போட்டியிட வைத்து அவரை பலி ஆடு ஆக்கிவிட்டனர் என்று மத்திய அமைச்சரும், தலித் தலைவருமான ராம்தாஸ் அதவாலே கூறினார்.

தினத்தந்தி

வதோதரா

காங்கிரஸ் பதவியில் இருந்த போது அவருக்கு பொருத்தமானதொரு பதவியை கொடுக்கவில்லை. இப்போது பலி ஆடு ஆக்கிவிட்டனர் என்றார் அதவாலே.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு உயர் பதவிக்கு அடித்தட்டு சமூக மக்களை முன்னிறுத்த ஆர்வமில்லை என்பது தெளிவு என்றார் அதவாலே. மேலும் அவர் கூறுகையில் தே.ஜ.கூ வேட்பாளர் கோவிந்த்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றார். பிரதமர் மோடி பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் கொலைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளதை வரவேற்றார்.

குஜராத் மாநில தேர்தலில் பாஜகவுடன் தனது கட்சியான குடியரசுக் கட்சி கூட்டணி அமைக்கும் வாய்ப்புப் பற்றி விவாதிக்க போவதாக அவர் கூறினார்.

இட ஒதுக்கீட்டில் மாற்றம்

தற்போது நடைமுறையிலுள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உயர் சாதியைச் சேர்ந்த குஜ்ஜார், படேல், மராத்தா, ஜாட் மற்றும் பிற சமூகத்தின் ஏழைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இதற்கு பொருத்தமான அரசியல் அமைப்பு திருத்தமும் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்