கோப்பு படம் 
தேசிய செய்திகள்

மும்பை: ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் நாகபாத ஜங்சன் பகுதியருகே போதை பொருள் கடத்தல் நடத்தப்பட உள்ளது என மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உளவு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உசைன் பீ என்ற பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 1.8 கிலோ எடை கொண்ட போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர்.

இதுபற்றி வாரிய அதிகாரி சமீர் வாங்கடே செய்தியாளர்களிடம் கூறும்போது, காஷ்மீரில் இருந்து போதை பொருள் கடத்தப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலானது, சிறுவர்கள் மற்றும் பெண்களை பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி வாரிய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு