தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இசையமைப்பாளர் இளையராஜா

மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர் . ஆனால் இளையராஜா பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இளையராஜா தமிழில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?