மும்பை,
மராட்டிய மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக். இவர் போதை தடுப்பு பிரிவு, அதன் முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நவாப் மாலிக், தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளிடம் நிலம் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து உள்ளது. தற்போது அவர் அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.
இந்தநிலையில் தன் மீதான வழக்கு, அமலாக்கத்துறை காவலில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி நவாப் மாலிக் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.