தேசிய செய்திகள்

டி.நரசிப்புரா அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

டி.நரசிப்புரா அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுதத வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மைசூரு-

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா பன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அப்பகுதியில் 6 வயது சிறுமி விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த சுரேஷ் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதையடுத்து சிறுமி அங்கிருந்து அழுது கொண்டு வீட்டிற்கு சென்றாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அவள் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறினாள்.

இதுகேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர். இந்தநிலையில் பன்னூர் பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்