தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது - புதுச்சேரி முதலமைச்சர்

புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மக்கள்கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் சித்த மருத்துவ சார்பில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத கல்வி கொள்கை, புதிய கல்வி கொள்கையால் புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்டுத்தான் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பாதிப்புள்ள தற்போதைய சூழலில் மாணவர் கல்வி பயில மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு மாநில அரசுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்