புதுடெல்லி,
இந்திய-சீன எல்லை இடையிலான எல்லை கோட்டை ஒட்டி சீனா புதிதாக 10 விமான தளங்களை அமைத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாக பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது. அதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எல்லையை ஒட்டி சீனா கட்டமைப்பு வசதிகளை பெருக்கி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த பதிவில், எல்லைகளில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம். அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல என்று அவர் கூறியுள்ளார்.