தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று பனிப்பொழிவு இருக்காது - வானிலை மையம் தகவல்

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று பனிப்பொழிவு இருக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகளால் வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதம் விளைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தபோவன் என்ற பகுதியில் ரெய்னி கிராமத்தில் தேசிய அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதிகளில் தற்போது தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 9 பேர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சமோலி, தபோவன், ஜோஷிமாத் ஆகிய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் பனிப்பொழிவோ, மழையோ இருக்காது என்று கூறியுள்ளது.

இருப்பினும், நாளையும், நாளை மறுநாளும் சமோலி மாவட்டத்தின் வடபகுதிகளில் லேசான பனிப்பொழிவோ அல்லது மழையோ இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை