Image courtesy : ANI 
தேசிய செய்திகள்

நார்வே வெளியுறவுத்துறை மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகை

நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நார்வே வெளியுறவுத்துறை மந்திரி அன்னிகன் ஹூட்ஃபெல்ட், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் 25 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் போது, ரைசினா உரையாடலில் பங்கேற்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை நார்வே தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நார்வே தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நார்வேயும் இந்தியாவும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பொதுவான லட்சியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகுதியில் இந்தியாவின் இலக்குகளை நிறைவேற்ற, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தியின் பெரிய அளவிலான வளர்ச்சி தேவைப்படுகிறது.

இதற்காக நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச தொழில்நுட்பம் தேவை. இது நார்வே வணிகம் மற்றும் தொழில்துறைக்கு சிறந்த வாய்ப்புகளைத் வழங்குகிறது. எனவே நார்வேவின் பல நிறுவனங்கள் இந்த பயணத்தின்போது பங்கேற்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்