கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கலாம் - ரயில்வே துறை

ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என்று இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டு, மீறுவோர்களிடம் அனைத்து மாநிலங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கலாம் என்று இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக அறிவுறுத்தல்கள் வரும் வரை இந்த உத்தரவு ஆறு மாத காலத்திற்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு