தேசிய செய்திகள்

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

நவம்பர் மாதம் ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர் ) ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

'நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?