தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் உத்தரவை பிறப்பிக்க கூடாது - ஐகோர்ட்டு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு தடைவிதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. #OfficeOfProfit #AAP #ECI #DelhiHC

தினத்தந்தி

புதுடெல்லி,

இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் 20 பேரது பதவியை பறிக்க கோரிய தேர்தல் கமிஷன் சிபாரிசுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி ஐகோர்ட்டை நாடியது, அப்போது தேர்தல் கமிஷனின் முடிவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க மறுக்கப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் பழைய மனுக்கள் ஆம் ஆத்மி தரப்பில் திரும்ப பெறப்பட்டது. புதிய மனுக்கள் அக்கட்சியின் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிதிகளை முறையாக பின்பற்றவில்லை, விசாரணை முன்னெடுக்கப்படவில்லை எனவே தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான மனுக்களை விசாரணை செய்த ஐகோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது.

இருப்பினும் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவித்தல் போன்ற எந்தவிதமான நடவடிக்கைகளை 29-ம் தேதி வரையில் எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாட்டையும் விதித்து உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது தொடர்பான முழு தகவல்களையும் தெரிவிக்கவும் ஐகோர்ட்டு தரப்பில் சம்மன் விடுக்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்